ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி சார்பில் கிறிஸ்து இயேசு பிறப்பு பண்டிகை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி சார்பில் கிறிஸ்து இயேசு பிறப்பு பண்டிகை.

ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி சார்பில் கிறிஸ்து இயேசு பிறப்பு பண்டிகையை முன்னிட்டு நாசரேத் திருமறையூரில் உள்ள மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் நடைபெற்றது. 

கல்லூரி தாளாளர் காபிரியேல் தேவயிரக்கம் ஜெபராஜன் தலைமை தாங்கி சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணளிகளுக்கு புத்தாடையை வழங்கினார். 

இந்த விழாவில் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவர்கள் கலந்து கொண்டார்கள். கல்லூரியின் தாளாளர் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இனிப்புடன் கிறிஸ்துமஸ் வெகுமதி மற்றும் பரிசுகளை வழங்கினார். 

மாலையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. கல்லூரி குருவானவர் அருட்திருமதி வனிதாராணி ஆபிரஹாம் ஆரம்ப ஜெபம் செய்தார். இசிஇ பிரிவு துறைத்தலைவர் முனைவர் ஆக்ஸஸ் பிரேமா மேரி வேதபாடம் வாசித்தார். 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாவட்ட நீதிபதியும் திருமண்டல தேர்தல் அதிகாரி ஜாண் சந்தோஷம் மற்றும் வாராங்கள் பவானி ஸ்வீட்ஸ் உரிமையாளர் சாமுவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள். 

கலை நிகழ்ச்சிகளை பேராசிரியர் முனைவர் ஜீலியட் ஜெயபாக்கியம் ஏற்பாடு செய்திருந்தார். கிறிஸ்துமஸ் பாடல்களை கல்லூரி பாடகர் குழுவினர்களை கொண்டு பேராசிரியா பிளஸ்ஸிங் மேசாக் தாசன் ஏற்பாடு செய்திருந்தார். 

இவ்விழாவில் டினட்டா, துபாய் துணை மேலாளர் மகேஸ் குகன், செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சாத்ராக்தாஸ், திருநெல்வேலி ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முதல்வர் சுமைலி ஜெபரஞ்சினி சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இவ்விழாவிற்கான நிகழ்ச்சிகளை பேராசிரியர் ஸ்டேன்லி ஜாண்சன் தொகுத்து வழங்கினார். முடிவில் கல்லூரி முதல்வர் நன்றி‌ கூறினார் நிகழ்ச்சிச்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் ஆலோசனையின்படி முதல்வர், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad