தூத்துக்குடி தெற்கு மாவட்டம் உடன்குடி கிழக்கு ஒன்றியம் பரமன்குறிச்சி பஜாரில் மாவட்ட திமுக பிரதிநிதி மதன்ராஜ் ஏற்பாட்டில் 2026 புதிய வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் முகாம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. முகாமினை மாவட்ட திமுக பொருளாளர் விபி. ராமநாதன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் செந்தில், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், மாவட்ட மகளிர் சமூக வலைதள பொறுப்பாளர் நித்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி திருச்செந்தூர் தொகுதி செயலாளர் குட்டி என்ற வெட்டிவேந்தன், காங்கிரஸ் பிரமுகர் பொண்ணு வின்சென்ட்,
ஒன்றிய திமுக தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் பாபுஜி, சுற்றுச்சூழனி அமைப்பாளர் சிங்க ராஜா, இளைஞர் அணி முத்துராஜா, ஆதிதிராணி அமைப்பாளர் பொன்னிலிங்கம் கிளை கழக செயலாளர்கள் மகேஸ்வரி, ரவி மகாராஜா, தட்ப சக்தி முருகன், விஜயகுமார், ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த முகாம் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செயல்படும் பொதுமக்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தெரிவித்துள்ளனர்
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக