சென்னையில் போராட்டம் நடத்தும் செவிலியர்களை வலுக்கட்டாயமாக கைது செய்ததை கண்டித்து இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முன்பு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக இரண்டாவது நாளாக செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கம் காத்திருப்பு போராட்டம் மாவட்டத் தலைவர் ஆரோக்கிய பிரமிளா தலைமையிலும், மாவட்டச் செயலாளர் தனலட்சுமி முன்னிலையிலும் நடைபெற்றது.
தமிழ்நாடு நில அளவை ஒன்றிணைப்பு மாநில பொதுச் செயலாளர் அண்ணா குமரேசன், மாவட்டத் தலைவர் இல.விஜயராமலிங்கம், மாவட்டச் செயலாளர் ஹ.அப்துல் நாஜுமுதீன், மாவட்ட பொருளாளர் என்.வேலுச்சாமி, தணிக்கையாளர் மைய சக்தி,
தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க மாவட்ட தலைவர் பழனிக்குமார், ஓய்வூதிய சங்க மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் விஜயராகவன், மாவட்ட பொருளாளர் ராமச்சந்திர பாபு ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக