திருப்பத்தூரில் 46 லட்சம் ரூபாயில் நடை பெற்ற பணிகளை துவக்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை!
திருப்பத்தூர் , டிச 7 -
திருப்பத்தூர் மாவட்டம் 36 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் மின் கோபுர விளக்கு மற்றும் 10 லட்சம் மதிப்புள்ள சைக்கிள் ஸ்டாண்ட் நிழல் கூடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு திருவண்ணாமலை நாடாளு மன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை திறந்து வைத்தார்.திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வேலன் நகர், சின்னகுளம் மாரியம்மன் தெரு, அய்யம்பேட்டை, கோட்டை தெரு, பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் 36.ரூபாய் லட்ச மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 7 உயர் மின் கோபுர விளக்கை இன்று திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்.மற்றும் திருப்பத்தூர் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 லட்சம் மதிப்பில் சைக்கிள் ஸ்டாண்ட் நிழல் கூடம் அமைத்துத் தந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை உடன் இந்த நிகழ்ச்சியின் போது திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, நகர செயலாள ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் டி ரகுநாத். மாவட்டத் துணைச் செயலாளர் டி கே மோகன். நகர மன்ற துணைத் தலைவர் சபியுல்லா. மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்திர சேகரன். நகரத் துணைச் செயலாளர் கோ செல்வம். மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் டி.சி கார்த்தி மற்றும் நகர இளைஞரணி. இ ஐயப்பன் கௌரி ஐயப்பன் மாவட்ட நெசவாளர் அணி தசரதன்..வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக