டிச.7- தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகள் தேர்தல் நேரத்தில் பூத் ஏஜெண்டுகள் எப்படி பணியாற்ற வேண்டும் எப்படி பணியாற்றினால் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற முடியும் என்ற ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மினி மகாலில் வைத்து நேற்று மாலை நடைபெற்றது.
அப்போது மேடையில் பேசிய தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கூறுகையில் ஒரு கட்சிக்கு பூத் கமிட்டி பலமாக இருந்தால் மட்டுமே தேர்தலில் அதிக வாக்குகளை பெற முடியும் என கூறிய அவர் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை நாம் நேரடியாக மக்களுக்கு செய்து கொடுக்கும் போது மக்கள் மத்தியில் நமது கட்சியின் மீதான நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்ள முடியும் என கூறினார்.
பின்பு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் மக்களுக்கு செய்யக்கூடிய நலத்திட்டங்களை இந்த பூத் கமிட்டி மூலமாக தான் செய்ய முடியும் நீங்கள் தான் மக்களுடன் மக்களாக இருக்கக்கூடியவர்கள் அதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றினால் நாம் அதிகப்படியான வாக்குகளை பெற முடியும் என கூறினார்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக