தூய நெஞ்சக் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் மாநில அளவிலான மாநாடு மற்றும் 75வது பவள விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 டிசம்பர், 2025

தூய நெஞ்சக் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் மாநில அளவிலான மாநாடு மற்றும் 75வது பவள விழா!

தூய நெஞ்சக் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் மாநில அளவிலான மாநாடு  மற்றும் 75வது பவள விழா!
திருப்பத்தூர் , டிச 5 -

திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரியில் தேசிய மாணவர் படையின் மாநில அளவிலான மாநாடு கல்லூரி யின் 75ஆவது  பவள விழாவை முன்னி ட்டு 04 டிசம்பர் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் இருபதிற் கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து சுமார் 600 தேசிய மாணவர்படை மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் சேலம் 12 தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவர் படைப் பிரிவு கமாண்டிங் அதிகாரி திரு. கர்னல். ராஜிவ் குமார் அவர்கள் சிறப்பு விருந்தி னராகக் கலந்து கொண்டு தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு இராணுவம் மற்றும் இதரப் பாதுகாப்புப் படைகளில் உள்ள பணி வாய்ப்புகளை பற்றி விரிவாக எடுத்துரைத்து மாணவர் களோடு கலந்துரையாடினார். அவரைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட 12 தமிழ்நாடு பட்டாலியன் தேசிய மாணவர் படை பிரிவு நிர்வாக அதிகாரி  லெப்டினன்ட். கர்னல் பிரகாஷ் அவர்கள் இராணுவத்தில் வழங்கப்படும் பணி முன்னுரிமை வாய்ப்புகள், ஊதியம் மற்றும் இதர சலுகைகள் பற்றி தேசிய மாணவர் படை மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் எடுத்துரைத்தார். இம்மாநாட்டில் கல்லூரியின் செயலர் அருட்திரு முனைவர் பிரவீன் பீட்டர் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்க, கல்லூரி யின் முதல்வர் அருட்திரு முனைவர் முனைவர் மரிய ஆண்டனிராஜ் தலைமை வகித்தார். மேலும் கல்லூரியின் கூடுதல் முதல்வர் அருட்திரு முனைவர் முனைவர் தியோபில் ஆனந்த் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இம்மாநில அளவிலான மாநாட்டிற்குத் திருப்பத்தூர் தூய நெஞ் சக் கல்லூரியின் தேசிய மாணவர் படை அலுவலர் லெப்டினன்ட். சிவகுமார் அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார். இம்மாநாட்டில் பல கருத்துப் பரிமாற்றங் கள் மற்றும் விவாதங்களும் நடைபெற்று தேசிய கீதம் முழங்க இனிதே நிகழ்வு முடிவுற்றது.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad