ஆற்காடு தொகுதியில் பல்வேறு புணர மைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் உடன் ஆட்சியர் எம் எல் ஏ பங்கேற்பு !
ஆற்காடு , டிச 5 -
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதியில் பல்வேறு புணர் அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நீர்வளத்துறை சார்பில் ரூ.18
கோடி மதிப்பீட்டில் ஆற்காடு நகரப்பகுதி யில் கிளைவ் பஜார், தாசிபுரம் மற்றும் முப்பதுவெட்டி கால்வாய் புனரமைக்கும் பணி, ரூ.5.73 கோடி மதிப்பீட்டில் பென்னகர் மடுவின் குறுக்கே தோனி மேடு அருகே தடுப்பணை அமைக்கும் பணி மற்றும் ரூ.5 கோடி மதிப்பீட்டில்
ஆற்காடு பாலாறு அணைக்கட்டிலிருந்து பிரியும் கலவை வாய்க்கால் புனர மைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி
உரையாற்றினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா இ.ஆ.ப, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், நீர்வளத் துறை கண்காணிப்புப் பொறி யாளர் பவழக்கண்ணன், நகரமன்ற தலைவர் தேவிபென்ஸ் பாண்டியன், ஒன்றிய குழு தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன்,அசோக்,நகரமன்றதுணைத் தலைவர் பவளக்கொடி சரவணன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் ரமேஷ், செயற்பொறியாளர் வெங்கடேஷ், உதவி செயற்பொறியாளர் குமார் மற்றும் பலர் உள்ளனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக