மாநில இளம் விஞ்ஞானிகள் மாநாட்டில் பங்கேற்கும் வேலூர் மாணவர்கள் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வழியனுப்பு!
காட்பாடி ,டிச5
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில்வே நிலேயத்தில் மாநில இளம் விஞ்ஞானி கள் மாநாட்டில் பங்கேற்கும் வேலூர் மாணவர்கள் தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் வழியனுப்பு!
நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கைகள் சமர்பிக்கும் இளம் விஞ்ஞானிகளின் மாநில மாநாட்டில் சமர்பிக்க வேலூர் மாவட்டத்திலிருந்து இரண்டு குழு மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு இன்று புறப்பட்டு சென்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வழியனுப்பினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 7குழுக்களுக்கான அறிக்கை கள் தேர்தெடுக்கப்பட்டு மண்டல மாநாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்டன. மண்டல அளவில் நடைபெற்ற மாநாட்டில் இரண்டு குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாளை திண்டுக்கல் பி.எஸ்.என்.எ பொறியியற் கல்லூரி வாளகத்தில் 6 மற்றும் 7 ஆகிய இரு நாட்கள் நடை பெறும் மாநாட்டில் பங்கேற்க வேலூர் மாவட்டத்தில் இருந்து இரண்டு குழு மாணர்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.
1.வேலூர் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வழிகாட்டி ஆசிரியர் எஸ்.ராமு தலைமையில் மாணவர்கள் எஸ்.தீபேஷ், பி.தீரஜ் ஆகிய இருவரும் காட்பாடியில் சூழலியலில் தண்ணீர் பாதிப்புகளும் தீர்வுகளும் என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கை சமர்பிக்க உள்ளனர். 2.வேலூர் சாய்நாதபுரம் என். கே.எம். அரசு நிதிஉதவி மேல் நிலைப் பள்ளி வழிகாட்டி ஆசிரியர் எம்.மதன காமராஜ் மாணவர்கள் எஸ்.பி.ஆகாஷ், ஆர்.ஆதவன், ஆகியோர் வேலூர் சாய்நாதபுரத்தில் தண்ணீர் மேலாண்மை என்ற தலைப்பில் ஆய்வறிக்கைகள் சமர்பிக்க உள்ளனர்.நாளையும் நாளை மறுதினம் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க செல்லும் மாணவர்களை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த் தனன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இல.சீனிவாசன், ஆசிரியர் எம்.சதீஷ் குமார் ஆகியோர் காட்பாடி இரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக