திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி சென்றிருந்த தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (டிசம்பர் 4) காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக தமிழகமெங்கும் பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தெற்கு மண்டலம் சார்பில் முத்தையாபுரம் பல்க் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல தலைவர் மாதவன், கிழக்கு மண்டல் பிராபாரி சத்தியசீலன், மாவட்ட துணைத் தலைவர் மாசாணம், மாவட்ட பொருளாளர் பரமசிவம், பிரிவு தலைவர் சின்ன தங்கம், சமூக ஊடக பிரிவு மாநில செயலாளர் காளிராஜா, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கைது நடவடிக்கையை எதிர்த்து கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக