தூயநெஞ்சக் கல்லூரி பவள விழாவை முன்னிட்டு சடுகுடு-75 போட்டியை கைத் தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடக்கம்!
திருப்பத்தூர் - டிச.26
திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி பவளவிழாவை முன்னிட்டு சடுகுடு-75 போட்டிகள் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரு மான க.தேவராஜி முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் VIT வேந்தர் ஜி. விஸ்வ நாதனுக்கு தொன் போஸ்கோ விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருப்பத் தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் க.சிவ சௌந்தரவள்ளி, திருப்பத்தூர் நகர திமுக செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் ஆ.சம்பத்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கே.சி. எழிலரசன், பொதுக்குழு உறுப்பினர் சு.அரசு, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் டி.சந்திர சேகர் மற்றும் கட்சி தொண்டர்கள், கல்லூரி நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக