தனியார் பல் மருத்துவமனையில்ஏற்பட்ட தொற்றால் 8 பேர் உயிரிழந்ததை தொடர் ந்து மூடப்பட்டிருந்த பல் மருத்துவமனை திறப்பு !
மாவட்ட சுகாதார இணை இயக்குனர் ஞானமீனாட்சி திறப்பு .
வாணியம்பாடி, டிச.26-
திருப்பத்தூர் வாணியம்பாடி கச்சேரி சாலையில் பல் மருத்துவர் அறிவரசன் என்பவர் நடத்தி வந்த தனியார் பல் மருத்துவமனையில் ( VTS டென்டல் கிளினிக்) கடந்த 2022- 2023 ஆம் ஆண்டு இவரிடம் பல் சிகிச்சை பெற்று வந்த நியூடவுன் பகுதியை சேர்ந்த இந்திராணி, வரதன், கோணாமேடு பகுதியை சேர்ந்த நர்மதா,பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த ஜெய்சிலி, பெரியபேட்டை பகுதியை சேர்ந்த ஆபிசூர் ரரஹமான், உதயேந்திரம் பகுதியை சேர்ந்த அனிதா,அலசந்தாபுரம் பகுதியை சேர்ந்த சத்யா, செங்கிலிகுப்பம் பகுதியை சேர்ந்த இளங்கோவன் உட்பட 10 பேரில் 8 பேர் அடுத்தடுத்து 6 மாத காலத்திற்குள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் 2023-ஆம் ஆண்டு திருப்பத் தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரில் உள்ள ஒரு பல் மருத்துவமனையில் இருந்து மூளையில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்று காரணமாக 8 பேர் இறந்ததாக தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையை தொடர்ந்து வாணியம்பாடி யில் உள்ள தனியார் பல் மருத்துவமனை யில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத் துறை இணைய இயக்குனர் ஞான மீனாட்சி மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவ சுப்பிரமணியம் மற்றும் இந்திய பல் மருத்துவ சங்கத்தினர் குழு ஆகியோர் சம்மந்தப்பட்ட மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவ மனையை முடிசென்றனர்.இந்நிலையில் ஆய்வு மேற்கொண்ட இந்திய பல் மருத்துவ சங்க குழுவினர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் ஞானமீனாட்சிக்கு ஆய்வறிக்கை அனுப்பி இருந்தனர். அதில் மூடப் பட்டுள்ள பல் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க எல்லாம் தகுதிகளும் உள்ளதால் அதனை செயல்படுத்த திறந்த விட வேண்டும், பல் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று 8 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறி இருந்தது.இதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தர்வல்லி உத்தர வின் பேரில் வாணியம்பாடி வட்டாட்சியர் சுதாகர், நகர போலீசார் முன்னிலையில் சுகாதார இணை இயக்குனர் ஞான மீனாட்சி மூடப்பட்டிருந்த பல் மருத்துவ மனையை மீண்டும் திறந்து வைத்தார்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக