கிறிஸ்துமஸ் குடில் போட்டி
நாகர்கோவிலில் செயல்பட்டு வரும் ப்ரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் மற்றும் தமிழக அரசு கேபிள் டிவி நெட்வொர்க்கில் ஒளிபரப்பாகி வரும் பாரத் டிவி இணைந்து இறைமக்கள் வைத்திருக்கும் கிறிஸ்துமஸ் குடிலுக்கான போட்டியினை நடத்தியது.
ப்ரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் டாக்டர். மு. தர்மராஜன் தலைமையில் பாரத் மீடியா தலைமை மேலாளர் த. விசால் முன்னிலையில் சிறந்த கிறிஸ்துமஸ் குடில் தேர்வு செய்யப்பட்டது.
இதில் சகாய நகர் ஊராட்சிக்கு உட்பட்ட கிறிஸ்து நகர் சி.எஸ்.ஐ. ஆயர் மண்டல திருச்சபையின் சார்பில் அமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் தேர்வு செய்யப்பட்டது.
பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ப்ரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் டாக்டர் மு. தர்மராஜன், மாநில துணைத்தலைவர் சிலம்பொலி எம்.ஜெயராஜ், மாநில செயலாளர் டி.இளையபெருமாள் கௌரவ ஆலோசகர் டி.பாலகிருஷ்ணன் கிருஸ்துநகர் திருச்சபை அருட் போதகர், திருச்சபை நிர்வாகிகள் , இளைஞர்கள் மற்றும் இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக