தூத்துக்குடியில் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களுடன் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் கேரல் ஊர்வலம் நடைபெற்றது. பிரேசில், கனடா போன்ற வெளிநாடுகளில் கொண்டாடப்படுவது போன்று, பல்வேறு உருவ பொம்மைகள் மற்றும் அலங்காரங்களுடன் இளைஞர்கள் உற்சாகமாக நடனமாடினர்.
இதை தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற கரோல்ஸ் கார்னிவலில், மொத்தம் 10க்கு-மேற்ப்பட்ட கரோல் குழுக்கள் பங்கேற்றன. போர்ட், ட்ரோன், நண்டு, ரோபோ, கிறிஸ்துமஸ் தாத்தா போன்ற பல்வேறு கருப்பொருள்களை (themes) மையமாகக் கொண்டு வாகனங்கள் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இந்த ஊர்வலத்தில் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டதால், மத ஒற்றுமையும் சமூக நல்லிணக்கமும் வெளிப்படும் வகையில் அமைந்தது. டி.ஜே. இசை, ஒளி அலங்காரங்கள் மற்றும் நடனங்களுடன் மக்கள் கிறிஸ்துமஸ் இரவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
கரோல் ஊர்வலம் சுமூகமாக நடைபெற, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக