தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் ஏரி சேற்றில் சிக்கிய யானை பல மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்பு !
யானை மீட்டு ஆந்திரா மாநில சரணா லயத்துக்கு எடுத்துச் செல்லும் வனத்து றையினர்!
குடியாத்தம் , டிச 1 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி டிபி பாளையம் கந்தன் செருவு தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள ஏரியில் தண்ணீர் குடிக்க அந்த ஒற்ற யானை தண்ணீர் குடிக்கும் போது எதிர்பாராத விதமாக ஏரியில் உள்ள சேற்றில் சிக்கி உயிருக்கு போராடி வருவதாக அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் ஆந்திர வனத்துறையினரு க்கும் குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் விரைந்து சென்ற ஆந்திர மாநில வனத்துறையி னரும் காவல்துறையினரும் குடியாத்தம் வனத்துறையினரும் இரண்டு ஜேசிபி இயந்திரம் மூலம் ஏரியில் தத்தளித்து இருந்த யானை மீட்கும் பணியில் ஈடுபட்டனர் சுமார் 6 மணி நேர போராட்டத் திற்கு பின் ஆந்திராவில் இருந்துஇரண்டு கும்கி யானைகளை வர வைத்து அதன் உதவியுடன் ஏரி செற்றில் சிக்கி காயமடைந்திருந்த யானை ஆந்திர வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆந்திரா மாநிலத்தில் உள்ள பலமனேரி பகுதியில் உள்ள யானைகள் சரணா லயத்திற்கு அழைத்துச் செல்லும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின் றனர் தமிழக ஆந்திர எல்லை வனப் பகுதியில் தனியாக சுற்றி திரிந்த ஒற்றை யானை காயம் அடைந்திருந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஏரி சேற்றில் சிக்கி மீட்கப்பட்ட சம்பவம் தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக