வேலூர் மாவட்ட அளவிலான அறிவியல் பழகு வானவில் மன்ற போட்டிகள் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 டிசம்பர், 2025

வேலூர் மாவட்ட அளவிலான அறிவியல் பழகு வானவில் மன்ற போட்டிகள் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு!

வேலூர் மாவட்ட அளவிலான அறிவியல் பழகு வானவில் மன்ற போட்டிகள் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்பு!
வேலூர் , டிச.1

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் அரசு பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான வானவில் மன்ற அறிவியல் பழகு போட்டிகள் உலகலா விய சவால்களுக்கு உள்ளுர் அளவிலான தீர்வுகள் என்ற தலைப்பில் வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட முதன்மை க்கல்வி அலுவலர் ஆர்.பிரேமலதா அவர்களின் வழிகாட்டுதலின் படி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் கே.எம்.ஜோதீஸ் வரபிள்ளை தலைமை தாங்கினார்.   போட்டிகளை பள்ளியின்  தலைமை ஆசிரியர் கே. விஜயலட்சுமி  துவக்கி வைத்தார்.மாவட்டக்கல்வி அலுவலர் பி.செந்தில்குமார் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் களையும் கேடயங்களையும் வழங்கி பேசினார். நிகழ்ச்சியை பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் சாந்தி  மாவட்ட வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் ஆகியோர் ஒருங்கிணைத் தனர்.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா. ஜனார்த்தனன்  வானவில் மன்ற முதன்மை கருத்தாளர்கள் என்.கோடீஸ் வரி ஜெ.உதயகுமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர். வானவில் மன்ற கருத்தாளர்கள் முகமது பாஷா, ஜெகன், ஜமுனா, வெண் ணிலா, பரிமளா, அருணா ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந் தனர் மாவட்ட அளவிலான இப் போட்டி யில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் இருந்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த 24 குழுக்களைச் சார்ந்த 72 மாணவர்கள் பங்கேற்றனர்.
உலகளாவிய சவால்களுக்கு உள்ளுர் அளவிலான தீர்வுகள் என்ற தலைப் பிலான போட்டிகளில் பின்வரும் மாண வர்கள் மாநில அளவிலான போட்டி களுக்கு தகுதி பெற்றனர்.
 1.அணைக்கட்டு வட்டம் வசந்தநடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எஸ்.தன்சிகா குழுவினர் 2.கே.வி.குப்பம் வட்டம் தொன்டான்துளசி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எம்.கோபிகா குழுவினர் 3.அணைக்கட்டு வட்டம் ராம புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எஸ்.சரன்யா குழுவினர் முடிவில் வான வில் மன்ற கருத்தாணர் ஜமுனா நன்றி கூறினார்.Photo Caption அறிவியல் பழகு மாவட்ட அளவிலான வானவில் மன்றத் தின் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட கல்வி அலு வலர் இடைநிலை கல்வி பி செந்தில் குமார் வழங்கிய போது எடுத்த படம் உடன் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் கே எம் ஜோதிசுவர பிள்ளை தமிழ்நாடு அறிவி யல் இயக்க மாவட்ட செயலாளர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சா குமரன் சாந்தி கருத்தாளர்கள் என். கோடீஸ்வரி ஜெ உதயக்குமார் உள்ளிட்டோர்

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad