உயிர் போகும் நிலையிலும் கல்லூரி மாணவிகளின் உயிரைக் காப்பாற்றிய கல்லூரி பேருந்து ஓட்டுனர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 1 டிசம்பர், 2025

உயிர் போகும் நிலையிலும் கல்லூரி மாணவிகளின் உயிரைக் காப்பாற்றிய கல்லூரி பேருந்து ஓட்டுனர்!

உயிர் போகும் நிலையிலும் கல்லூரி மாணவிகளின் உயிரைக் காப்பாற்றிய கல்லூரி பேருந்து ஓட்டுனர்!
ராணிப்பேட்டை , டிச 1 -

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஆற்காடு பகுதியில் ஆற்காடு மகாலட்சுமி பெண்கள் கல்லூரி செயல் பட்டு வருகிறது இந்தக் கல்லூரிக்கு ராணிப்பேட்டை மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் வேலூர் மாவட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து பெண் பிள்ளைகள் படிக்க வருகிறார்கள் 
இதனை தொடர்ந்து இன்று காலை திருத்தணி. கேஜி கண்டிகை. ஆர்.கே பேட்டை. சோளிங்கர். வழியாக வாலாஜா ஆற்காடு செல்லும் கல்லூரி பேருந்து 
ரவி வயது 70 தகப்பனார் பெயர் பலரா மன்.சத்யா நகர் தாஜ்புரா. ஆற்காடு
என்ற விலாசத்தில் வசித்து வருகிறார் 
இவர் ஆற்காடு மகாலட்சுமி பெண்கள் கல்லூரியில் ஓட்டுநராக பணி செய்து வருகிறார் இவர் இன்று டிஎன் 73/ AA 6141 என் கொண்ட வண்டியை திருத்தணியில் இருந்து கேஜி கண்டிகை. ஆர் கே பேட்டை சோளிங்கர். வழியாக இன்று காலை கல்லூரி மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளார் வரும் வழியில் ஜம்பு குளம் கூட்ரோடு அருகே அரசு கலைக் கல்லூரி எதிரே வரும்பொழுது ஓட்டுநர் மயக்கம் ஏற்பட்டுள்ளது ஓட்டுநர் மாணவிகளை சத்தம் போட்டு அழைத்துள்ளார் மாணவி கள் அருகில் செல்வதற்கு முன்பே
கல்லூரி பேருந்து நிலை தடுமாறி ஓட ஆரம்பித்துள்ளது இதனால் பேருந்தில் இருந்த மாணவிகள் பதட்டத்தில் கத்தியுள்ளார்கள் இருந்தும் ஓட்டுனர் ரவி வாகனத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிகமான முயற்சி செய்து உள்ளார் தன் முயற்சி வீணானதால் அருகே உள்ள புளிய மரத்தில் மோதி சாலையில் கீழே இறங்கி நிறுத்திவிட்டு ஸ்டேரிங் மீது சாய்ந்து இறந்துள்ளார் .
பேருந்தில் இருந்த கல்லூரி மாணவிகள் சத்தம் போடவே அங்கிருந்தபொதுமக்கள் விரைந்து வந்து பேருந்தில் இருந்த டிரை வர் ரவி யை வெளியில் தூக்கி எடுத்து சோளிங்கர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் விரைந்து வந்த டிஎஸ்பி வெங்கடகிருஷ்ணன். 
போலீசார் உடலை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு உடல் ஆய்வு கூறுக் காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து எப்படி இறந்தார் என விசாரணை செய்து வருகின்றனர் மேலும் கல்லூரி மாணவிகள் சிறு கேரள்களும் கூட இல்லாமல் உயிர் தப்பிய உள்ளனர்
இன்று மாணவிகளுக்கு தேர்வு நடைபெற இருப்பதினால் கல்லூரி நிர்வாகத்திற் கும் உடன் பயின்றவர்களுக்கும் போன் செய்து தகவல் கொடுத்துள்ளனர்
மேலும் கல்லூரி மாணவிகள் 2 மணி நேரமாக எந்த வாகனமும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தன கல்லூரி மாணவிகள்  இன்று காலை தேர்வு நடக்க இருப்பதால். பொதுமக்கள் கல்லூரிக்கு போன் செய்தும் கல்லூரி நடவடிக்கை எடுக்க வில்லை கல்லூரி மாணவிகள் இரண்டு மணி நேரமாக கல்லூரி தேர்வு க்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது 
இரண்டு மணி நேரம் கழித்து கல்லூரி பேருந்து வந்து  மாணவிகளை அழைத்து சென்றது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad