தூத்துக்குடி மாவட்டம் குதிரை மொழி ஊராட்சி தேரிக் குடியிருப்பில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கற்குவேல் அய்யனார் திருக்கோவில் உள்ளது.
இந்த கோவிலில் மாதந்தோறும் பெளர்ணமி தினத்தன்று சிறப்பு பூஜை நடைபெறும். அதன்படி கார்த்திகை மாதம் 18 ம் தேதி பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று மதியம் யாகசாலை பூஜை, அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு திருவாசகம் வாசித்தனர். பின்னர் மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜை தீபாராதனை நடைபெற்றது. இதில் கற்குவேல் அய்யனார் திருக்கோவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் காந்திமதி மற்றும் கற்குவேல் அய்யனார் திருக்கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக