இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த ஒருவர், தனது மனைவியின் பெயரில் ரேஷன் கார்டு பெறுவதற்கு கடந்த மார்ச் மாதம் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்துள்ளார்.
2 மாதம் கழித்து ரேஷன் கடைக்கு புதிய ரேஷன் கார்டை அனுப்பியுள்ளதாக கடலாடி தாலுகா அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் மூக்கையூர் ரேஷன் கடை விற்பனையாளர் முத்துலெட்சுமியை சந்தித்து கேட்டுள்ளார்.
அவர் உங்களுக்கு கார்டு வந்துள்ளதாகவும் அதற்காக . ரூ.3500 கொடுத்து வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அவ்வளவு பணம் என்னிடம் இல்லை என கூறியுள்ளார்,ரேஷன் கடை விற்பனையாளர், முத்துலட்சுமி, கண்டிப்பாக பணம் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் புகார் தாரரின் மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவ காப்பீடு பதிவு செய்ய ரேஷன் கார்டு உடனடியாக தேவைப்பட்டது.
மீண்டும் முத்துலெட்சுமியை சந்தித்து கேட்ட போது அதிகாரிகளுக்கு தரவேண்டியுள்ள ரூ.500ஐ குறைத்துக் கொண்டு ரூ.3000 மட்டும் கடை தற்காலிக பணியாளர் சுப்பிரமணியிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
நேற்று முன்தினம் மாலை ரசாயனம் தடவிய ரூபாய் .3000 த்தை, ரேஷன்கடை முன்பகுதியில் வைத்து தற்காலிக பணியாளர் சுப்பிரமணியிடம் அந்த நபர் கொடுத்த போது மறைந்திருந்த டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
விற்பனையாளர் முத்துலெட்சுமி சொல்லித்தான் அப்பணத்தை வாங்கியதாக அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து முத்துலெட்சுமியை போலீசார் கைது செய்தனர்.
வே.செந்தில்குமார்
மாவட்ட செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக