தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மனைவி கோபித்துச் சென்றதால் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மனைவி கோபித்துச் சென்றதால் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை.

தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மனைவி கோபித்துச் சென்றதால் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு சந்தோஷம் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் காளிமுத்து (48), லாரி டிரைவர் இவருக்கு சித்ரா என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். 

காளிமுத்து வேலைக்கு சென்று விட்டு தினசரி மதுபோதையில் வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 15 தினங்களுக்கு முன்பு சித்ரா கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம்.

இதனை தொடர்ந்து மன வேதனை அடைந்த காளிமுத்து நேற்று இரவு தனது வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷோபா ஜென்சி மற்றும் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad