சர்வதேச மாற்றுத் திறனாளி களின் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் தின விழா!
ராணிப்பேட்டை , டிச 2 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்களை ஒன்றிய குழு தலைவர் வழியனுப்பி வைத்தார்சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 3.12.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், மாற்றுத் திறனாளிகள் தினவிழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக, நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 47 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய முன்னெடுப்பில், ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு மாற்றுத் திறனாளி நியமன உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை சென்னையில் நடைபெற உள்ள, இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, நெமிலி ஊராட்சி ஒன்றியத்தின் நியமன உறுப்பினர்கள் இன்று மாலை நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து, சென்னைக்கு பேருந்தில் புறப்பட்டு சென்றனர். அவர்களுக்கு உணவு வழங்கி, நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு அவர்கள் வழி அனுப்பி வைத்தார் இந்த நிகழ்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார் ஜெயஸ்ரீ மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக