வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் சட்ட திருத்தம் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கடன ஆர்ப்பாட்டம் !
காட்பாடி , டிச 24 -
வேலூர் மாவட்டம் காட்பாடி 100 நாள் வேலை திட்டம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மகாத்மா பெயரில் ஊரக வளர்ச்சி திட்டத்தை நிரப்பும் எண்ணத்தில் இருக்கும் ஒன்றிய பாஜக நிர்வாக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இன்று (24.12.2025) வேலூர் வடக்கு மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதி யில் மாவட்ட பொருளாளர் நரசிம்மன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று எளிய விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தையே சிதைக்கும் வகை யில் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததை யும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய் ப்பு திட்டத்தின் பெயரில் காழ்ப்புணர் வோடு தேசத் தந்தையின் பெயரையே நீக்கி வரலாற்றை மறைக்க எத்தனிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன உரை ஆற்றிய மாவட்ட பொறுப் பாளர் டி எம் கதிர் ஆனந்த் எம் பி
உடன் ஒன்றிய குழு தலைவர் வே.வேல் முருகன், ஒன்றிய கழக செயலாளர்கள் எஸ்.சரவணன், கா.கருணாகரன், சி.இரவி, தணிகாசலம், பகுதி கழக செயலாளர்கள் ஜி.வன்னியராஜா, பரமசிவம் மண்டலா குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், ஊரக உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், மதச்சாரபற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள், மகளிர் அணி மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப் பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக