திருப்பூர் மாநகராட்சி குப்பை மேலாண்மை பற்றி ஆலோசனை கூட்டம் நகராட்சி நிர்வாக துறை இயக்குனர் மேயர் ஆணையாளர் கலந்து கொண்டனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 டிசம்பர், 2025

திருப்பூர் மாநகராட்சி குப்பை மேலாண்மை பற்றி ஆலோசனை கூட்டம் நகராட்சி நிர்வாக துறை இயக்குனர் மேயர் ஆணையாளர் கலந்து கொண்டனர்



திருப்பூர் மாநகராட்சி மாநாட்டு மையம்(TOWN HALL)கூட்டரங்கில், நகராட்சி நிர்வாக துறையின் இயக்குனர் மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப அவர்களின் தலைமையில் திருப்பூர் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை குறித்து சுகாதார அலுவலர்கள்,சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுக்கு  வழங்கப்பட்ட ஆலோசனைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் மற்றும் ஆணையாளர் எம்.பி.அமித் இ.ஆ.ப., துணை மேயர் பாலசுப்ரமணியம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் வீடு வீடாக குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல்,நிறுவனங்கள், இறைச்சி கடைகள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவற்றில் தனித்தனியே குப்பைகளை தரம் பிரித்து வாங்குதல் மற்றும் முறையான குப்பை மேலாண்மை குறித்து,பல்வேறு ஆலோசனைகள்   வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து இந்தக் கூட்டத்தில், குப்பைகளை தரம் பிரித்து வாங்குதல் மற்றும் குப்பை மேலாண்மையில் கள நிலவரங்கள் குறித்து சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் விரிவாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad