விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் முருகன் ஆலயத்தில் சிதறு தேங்காய் உடைத்து முருகனிடம் முறையிடும் போராட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 டிசம்பர், 2025

விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் முருகன் ஆலயத்தில் சிதறு தேங்காய் உடைத்து முருகனிடம் முறையிடும் போராட்டம்!

 விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் முருகன் ஆலயத்தில் சிதறு தேங்காய் உடைத்து
 முருகனிடம்  முறையிடும் போராட்டம்!
குடியாத்தம் , டிச 10 -

வேலூர் மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தீபதூணில் தீபம் ஏற்றுவதை தடுக்கும் தமிழக அரசுக்கும் இந்து சமய அறநிலை யதுறைக்கும் நல்ல புத்தியை கொடுத்து உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி முருகனிடம் சஷ்டி ஆன இன்று சிதறு தேங்காய் உடைத்து கடவுளிடம் முறையிடும் போராட்டம் குடியாத்தம் நகர் தேரடி முருகன் கோவிலில்  நடைபெற்றது
இதில் மாவட்ட துணை தலைவர் ரவி மாவட்ட இணை செயலாளர் பிரபாகரன் ,மாவட்ட பஜ்ரங்தள் கார்த்தி,விஜய்,நகர தலைவர் சிதம்பரம்,செயலாளர் பிரபா கரன்,வினோத்,மதன் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதே போல் குடியாத்தம் ஒன்றியம் மூங்கபட்டு மீனாம்பாள்புரம் மாரியம்மன்கோவிலில் நூதன போராட்டம் நடைபெற்றது

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad