தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தெருமுனை பிரச்சாரக் கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தெருமுனை பிரச்சாரக் கூட்டம்.

தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தெருமுனை பிரச்சாரக் கூட்டம்.

டிச. 10, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தெற்கு மண்டல பாஜக சார்பாக தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. 

மண்டலத் தலைவர் மாதவன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சுடலை முத்து வரவேற்றார். கிளைத் தலைவர்கள் சங்கரபாண்டி, அய்யம்பெருமாள், தொழில் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்திராங்கதன் தொடக்க உரை நிகழ்த்தினார்.

அப்போது, மாநகராட்சியின் டிவிகே நகர் மற்றும் இந்திரா நகர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்தும், தெற்கு மண்டலத்தில் நிலுவையில் உள்ள அடிப்படை வசதிகளை விரைவாக நிறைவேற்றக் கோரியும் அவர் பேசினார்.

மேலும் இந்த கூட்டத்தில் மாவட்ட வக்கீல் சண்முகசுந்தரம், பொதுச்செயலாளர் முகம், சித்தி அப்பங்கள் துணை தலைவர் மாசானம், இந்து வியாபாரி சங்க மாநில செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் மக்கள் பிரச்னைகளை பட்டியலிட்டு பேசினர்.
கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஜெயராம், பாலகுமார், மகளிர் அணி துணை தலைவர் செல்வி, மண்டல செயலாளர் முத்துராஜ், இளைஞர் அணி மாவட்ட தலைவர் சக்திவேல், துணை தலைவர் பொன்விக்னேஷ், பட்டியல் பிரிவு பலவேசம் சிலம்பொழி, கருணாகரபாண்டி, முள்ளக்காடு பிரபாகரன், துர்க்கையப்பன் ஞானபிரகாசம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad