காட்பாடி ஒன்றிய கிளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாடு!
காட்பாடி , டிச 7 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் காட்பாடி ஒன்றிய அளவிலான அறிவியல் இயக்க மாநாடு இன்று காட்பாடியின் உள்ள சேவகன் அறக்கட்டளை அலுவலகத்தில் நடை பெற்றது கிளை தலைவர் ஆர்.சுதாகர் தலைமை தாங்கினார். முன்னதாக கிளை செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசி வேலை அறிக்கை சமர் பித்தார். வேலூர் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் முன்னிலை வகித்து பேசினார்.சிறப்பு அழைப்பாள ராக இயற்கை வேளாண் விஞ்ஞானி மக்கள் நல சந்தையின் ஒருங்கிணைப் பாளர் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் கு.செந்தமிழ்செல்வன் பங்கேற்று பேசினார். பொருளாளர் எம்.ஈஸ்வரி வரவு செலவு அறிக்கை சமர்பித்து பேசினார்.விவாதிற்கு பின்னர் செயல் அறிக்கை மற்றம் பொருளர் அறிக்கை ஏற்க்கப்பட்டது. பின்னர் பின் வரும் நிர்வாகிகள் ஒரு மனதாக தேர் தெடுக்கப்பட்டனர் கிளை தலைவராக ஆர்.சுதாகர் கிளை செயலாளராக ஆர்.ராதாகிருஷ்ணன், கிளை பொருளா ளர் எம்.ஈஸ்வரி, கிளை துணைத்தலைவ ராக கே.சோகாராமன், கிளை இணை செயலாளராக இ.மைதிலி நனினகுமாரி
தீர்மானங்கள்
1.காட்பாடியில் உள்ள அரசு பள்ளிகளில் தேர்ச்சி விழுக்காடு அதிகரிக்க கல்வி ஆலோசனைகளை மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வழங்குவது.
2.வாசிப்போம் நேசிப்போம் என்ற அடிப்படையில் மாணவர்களிடையே நூல்கள் செய்திஏடுகளை வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்துவது.
3.போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர் நிகழ்வுகளை நடத்துவது
4.மாநில அளவிலான குழந்தைக அறிவியல் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களை பாராட்டுவது 5.மாவட்ட மாநாட்டில் காட்பாடியிலிருந்து நிர்வாகிகள் அனை வரும் பங்கேற்பது முடிவில் கிளை பொரு ளாளர் எம்.ஈஸ்வரி நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக