டிச.23, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உத்தரவின்படி பொதுச் செயலாளர் N. ஆனந்த் வழிகாட்டுதலோடு
தூத்துக்குடி மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராக எஸ் டி ஆர் சாமுவேல்ராஜ் அறிவிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து தூத்துக்குடி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை முன்பு மாவட்ட இளைஞரணி செயலாளர் சுபாகர் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்கள்.
பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள். இருப்பினும் தனக்கு தான் மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து கொண்டிருந்த அஜிதா ஆக்னெல் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படவில்லை, அதனால் பனையூரில் விஜய் வீட்டு முன்பு தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக