பிரபல நாதஸ்வர இசை கலைஞர் ஆறுமுகநேரி அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் காளிதாசன்,
இவர் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி திருநெல்வேலி திருச்செந்தூர் புதிய இணைப்பு சாலை வழியாக திருவைகுண்டம் அருகில் மோட்டார் சைக்கிள் சென்ற போது எதிர்பாராத விதமாக ஆடு குறுக்கே வந்துள்ளது.
இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்து தலையின் பின்பக்கம் அடி விழுந்தது, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் இன்று டிசம்பர் 24 அதிகாலையில் உயிரிழந்தார்.
இவர் நாதஸ்வர கலை உலகில் நிறைய சாதனை மற்றும் கிராமிய கலைமாமணி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் சேதுபதி ராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக