கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி மாமியார் வீட்டிற்கு வர்ணம் பூச சென்ற மருமகன் மீது வீட்டின் மேல் தள சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 23 டிசம்பர், 2025

கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி மாமியார் வீட்டிற்கு வர்ணம் பூச சென்ற மருமகன் மீது வீட்டின் மேல் தள சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்பு!

 கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி மாமியார் வீட்டிற்கு வர்ணம் பூச சென்ற மருமகன் மீது வீட்டின் மேல் தள சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்பு!
வாணியம்பாடி, டிச.23 - 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் யோசுபாதம். இவர் வர்ணம் பூசும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று மேல்மிட்டாளம் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டி ற்கு சென்று கிருஸ்துமஸ் பண்டிகை வருவதால் வீட்டிற்கு வர்ணம் பூசும் பணி யில் ஈடுபட்டுள்ளார்.அப்போது வீட்டின் நுழைவு வாயில் உள்ள சுவர் மீது ஏறி வர்ணம் பூசிக்கொண்டிருந்த போது எதிர்பாராவிதமாக மேல் தள சுவற்றில்  இருந்து கீழே தவறி விழுந்துள்ளார்.
அப்போது அவர் மீது மேல் தள சுவர்  காலில் விழுந்ததில் யோசுபாதத்தின் கால் துண்டாகியுள்ளது.உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச் சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்கு சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியி லேயே அவர் உயிரிழந்துள்ளார். 
சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க் கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad