வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பில் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மீது புகார் மனு!
வாணியம்பாடி, டிச.23 -
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மாவட்டத் தலை வர் கே. ஃபசி அக்கரம் தலைமையில்
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மற்றும் பெண்கள் நீதியமைப்பு ஆகி யோர் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மீது புகார் மனு அளித்தனர்.கடந்த 15 ஆம் தேதி பீகார் மாநிலத்தில் ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கிய போது முஸ்லிம் பெண் மருத்து வர் நுஸ்ரத் பர்வீன் முகத்தில் அணிந்து இருந்த பர்தாவை இழுத்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மத சுதந்திரத்திற்கு எதிரானதும் பெண்களின் தனிப்பட்ட உரிமைகளுக்கு விரோதமானது, இந்திய அரசியலமைப் பின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்பதால் இச்செயலை கடுமை யாக கண்டித்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு எதிராக நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்
அப்போது கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சையத் சலீம், மாவட்ட செயலாளர் டி.முஹம்மத் இப்ராஹிம், மாவட்ட துணைத் தலைவர் எம்.முஹம்மத் அயூப், நகர செயலாளர் கே. இம்ரான் அஹ்மத், மாவட்ட பொருளாளர் சி.முஹம் மத் நதீம், பெண்கள் நீதியமைப்பு தலை வர் ஓ.அலியா நிகாத் மற்றும் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா மற்றும் பெண்கள் நீதியமைப்பு நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக