குடியாத்தம் கல்லபாடி ஊராட்சியில் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் !
குடியாத்தம் , டிச 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பெண்களு க்கான தொழில் முனைவோர் 22.12.2025 திங்கள் முதல் 24.12.2025 புதன் வரை 3 நாள் பயிற்சி கல்லப்பாடி ஊராட்சியில் நடைபெற்றது பயிற்சியில் சுமார் 40 பெண்கள் கலந்து கொண்டு கூட்டாக சேர்ந்து சிறுதானிய உணவு தயாரித்து எப்படி வியாபாரம் (Marketing) செய்து தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கு வது என்று 3 நாள் பயிற்சியில் கலந்து கொண்டு சிறப்பான முறையில் சிறுதானிய உணவுகளை தயாரித்தனர்
பயிற்சியின் நிறைவு நாளில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக உணவு திட்ட மேலாண்மை உதவி இயக்குனர் கலந்து கொண்டனர் மேலும் காஞ்சிபுரம் Hand in Hand தொண்டு நிறுவன மேலாளர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தமிழ்நாடு SIDCO தொழிற்பேட்டை ஆட்சியர் லதா IAS அவர்கள் கையொப்பமிட்ட சான்று மற்றும் தொழில் முனைவோர் கையேடு புத்தகம் ஆகியவற்றை கல்லப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சி. இரமேஷ் குமார் B.Sc., தலைமையில் சான்றுகள் வழங்கப்பட்டது. மேலும் பயிற்சி முகாமில்
C. பஞ்சாட்சரம் கல்லப்பாடி ஊராட்சி மன்ற உறுப்பினர் அவர்களும் உடன் இருந்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக