நெருப்பெரிச்சல் பகுதி தமிழக வெற்றி கழகத்தின் பகுதி செயற்குழு உறுப்பினர் பழனி குமார் திருப்பூர் மாநகராட்சிக்கு கண்டனத்தை தெரிவித்தார் இது பற்றி அவர் கூறியதாவது
திருப்பூர் மாநகராட்சி வாவிபாளையம் ஐந்தாவது வார்டு நான்காவது வார்டு பகுதி மக்களை உயிரினை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கும் வேலையை திருப்பூர் மாநகராட்சி செய்ய தொடங்கி வருகிறது இந்த பகுதியில் தொடர்ந்து குப்பைகளை மலை போல் குவித்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேல் இதே பகுதியில் மாபெரும் தீ விபத்து ஏற்பட்டது 13 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் ஆனாலும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் அந்த குப்பை கிடங்குகளை சரி செய்யாமல் மீண்டும் தீயிட்டு எரிக்கும் வேலையை செய்தார்கள் இது சம்பந்தமாக பலமுறை இந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை இந்த பகுதி முழுக்க முழுக்க அதிமுக கவுன்சிலரில் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியாகவும் இருந்து வருகிறது இதுவரை மற்ற அரசியல் கட்சி சார்பாகவும் எந்த ஒரு கண்டனங்களும் தெரிவித்து பேனர்கள் வைக்கப்படவில்லை நானும் பலமுறை தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மாசுக்கட்டுப்பாடு துறை அலுவலகம் சென்று நேரடியாக இது சம்பந்தமாக புகார்கள் தெரிவித்தும் தீர்வு இல்லை இன்று மீண்டும் அந்த பகுதியில் மாபெரும் தீ விபத்து ஏற்பட்டு கரும் நச்சுப் புகை சூழ்ந்து பொதுமக்களை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது இந்த தீயை தீயணைப்புத் துறையினர் வந்து அனைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் அருகே சுமார் 1500 வீடுகள் உள்ளது மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி
வாவிபாளையம் திருமலைநகர் திருமுருகன்நகர் கொண்டாத்தம்மண் நகர் AVS நவீன் கார்டன் கிருஷ்ணாநகர் பாலஜிநகர் கருணாபிகைநகர் மகாசக்திநகர் சமத்துவபுரம் #மேநகர் ஜெயாநகர் ஜேஜேநகர் எழில்நகர் நாடார்காலனி நெருப்பெரிச்சல் வாவிபாளையம் திருக்குமரன்நகர் GKமார்டன்ஹவுஸ் தியாகிகுமரன்காலனி பாரிவள்ளல்நகர்
இந்த பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில் குப்பைகளை தரம் பிரிக்காமல் ஆபத்தான முறையில் பொது இடத்தில் கொட்டப்பட்டு மாபெரும் சுற்று சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது திருப்பூர் மாநகராட்சி
இவ்வாறு
தமிழக வெற்றி கழகம் நெருப்பெரிச்சல் பகுதி கழகத்தின் செயற்குழு உறுப்பினர் பழனிக்குமார் தெரிவித்தார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக