தூத்துக்குடியில் புதிய பேருந்து சேவைகளை அமைச்சர் கொடியசைத்து துவங்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் புதிய பேருந்து சேவைகளை அமைச்சர் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

தூத்துக்குடியில் புதிய பேருந்து சேவைகளை அமைச்சர் கொடியசைத்து துவங்கி வைத்தார் .

டிசம்பர் 4, தூத்துக்குடியில் இருந்து சுப்பிரமணியபுரம், கீழ வைப்பார், பெருங்குளம் மற்றும் கோவில்பட்டியில் இருந்து வெள்ளப்பனேரி, கீழ ஈரால், வேடப்பட்டி, அகிலாண்டபுரம் ஆகிய ஏழு புதிய பேருந்து சேவைகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் இதைத்தொடர்ந்து பகுதிச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், மாமன்ற உறுப்பினர் ஜாக்குலின் ஜெயா, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி மற்றும் அரசு போக்குவரத்துக் கழக தூத்துக்குடி மண்டல பொதுமேளாளர் ராமகிருஷ்ணன், கோட்ட மேலாளர் சண்முகம், கிளை மேலாளர் ரமேஷ் பாபு, தொமுச நிர்வாகிகள் பொதுச்செயலாளர் தர்மன், பொருளாளர் முருகன், மத்திய தொழிற்சங்க துணைச் செயலாளர்கள் கருப்பசாமி, மகாவிஷ்ணு, நகரக் கிளை செயலாளர் லிங்குசாமி, தலைவர் பி.வி. முருகன், பொருளாளர் மனோகரவேல் மற்றும் தொமுச உறுப்பினர்கள் சரவணன், மாரியப்பன், சுரேஷ், படையப்பா கணேஷ், ராஜகுமாரசாமி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad