தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் வாக்குறுதிகளை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மறியல் போராட்டம் !
வேலூர் , டிச 4 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதல மைச்சர் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை ஏமாற்றப்பட்டோம் மீண்டும் போராட்ட பதாகையை உயர்த்திப் பிடிப் போம் என்ற கோஷங்களோடு இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் மறியல் போராட்டம் நடை பெற்றது மறியல் போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் டிடி ஜோஷி தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் எம் எஸ் தீனதயாளன் மாவட்ட பொருளாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் முகமது உசேன் ராஜாமணி ஆகியோர் மறியல் போராட் டத்தினை துவக்கி வைத்தனர் ஜாக்டோ ஜியோ பெயர் மட்டக் குழு உறுப்பினர் முனைவர்செ. நா. ஜனார்த்தனன் பல் வேறு துறைகளை சார்ந்த நிர்வாகிகள் வருவாய் துறை ரமேஷ் ஊரக வளர்ச்சித் துறை பா வேலு துரைராஜ் ஏழுமலை முன்னாள் மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்டோர் வாழ்த்து பேசினார்
வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை மருத்துவத்துறை அளவைத் துறை சத்துணவு துறை கிராம உதவியாளர் பட்டு வளர்ச்சி துறை மேலும் பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பயனளிப்பு ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் காலியாக உள்ள லட்சக்கணக்கான காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும் நெடுஞ் சாலைத் துறையில் பணியாற்றம் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை நிலைப்படுத்த வேண்டும் கருணை அடிப்படையில் பணி நியமனங் களை 25 சதவீதமாக தொடர வேண்டும் பெண் அரசு ஊழியர்களுக்கு அரசு சிறப்பு செயல்களை அமல்படுத்த வேண்டும் அவுட்சோர்சிங் முறை ஒப்பந்த ஊதியம் தொகுப்பூதிய முறை ரத்து செய்து அனைவருக்கும் முறையான காலம் வரை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது இந்த மறியல் போராட்டத்தில் 50 பெண் ஊழியர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற னர் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேன்கள் மூலமாக அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக