அரசு பேருந்து ஓட்டுநர் மகன் மிக சிறிய அளவிலான வாசிங் மெசினை வடி வமைத்து உலக கின்னஸ் சாதனை படைத்த மாணவர் !
வாணியம்பாடி அருகே பூங்குளம் கிராமத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் மகன் மிக சிறிய அளவிலான வாசிங் மெசினை வடிவமைத்து உலக கின்னஸ் சாதனை படைத்ததுள்ளார்.
வாணியம்பாடி, டிச.30-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பூபதி. இவர் திருப்பத்தூர் பணிமனை யில் அரசு பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் ஜீவானந்தம் இவர் சேலம் பகுதியில் உள்ள விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் கண் ஒளியியல் பிரிவு மருத்துவ துறையில் 3 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மருத்துவ துறையை தேர்வு செய்து படித்து வந்தாலும் கூட இவருக்கு அறிவியல் தொடர்பான கண்டுபிடிப்பு களில் ஆர்வம் உள்ளதால் தனது படிப் பையும் தொடர்ந்து படித்து கொண்டே பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கில் செயல்பட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு அவர் படிக்கும் கல்லூரி நிர்வாகமும் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளது.இதன் காரணமாக இவர் தற்போது மிக சிறிய அளவிலான (12.1 கிராம்)அளவிலான வாசிங் மெசினை சுமார் 1 மணி நேரத்தில் வடிவமைத்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை யை அங்கீகரிக்கும் வகையில் உலக கின்னஸ் சாதனை நிறுவனம் மாணவன் ஜீவானந்தம் செய்த சிறிய வாஷிங் மெசினை அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கியுள்ளது.
ஏற்கனவே கேரளாவை சேர்ந்த ஒருவர் 25 கிராம் அளவிலான சிறிய சலவை' எந்திரத்தை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளார். அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் ஜீவானந்தம் 12.1 கிராம் எடையில் மிக சிறிய வாஷிங் மெசினை தயாரித்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மாணவர் செயல் அவருடைய கிராம மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும்,பாராட்டையும் பெற்றுள்ளது. மேலும் அந்த கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் மாணவன் ஜீவானந்தத்தை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக