நாசரேத் ஒய்.எம்.சி.ஏ கிறிஸ்துமஸ் கால குடும்ப கூடுகை விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

நாசரேத் ஒய்.எம்.சி.ஏ கிறிஸ்துமஸ் கால குடும்ப கூடுகை விழா.

நாசரேத் ஒய்.எம்.சி.ஏ கிறிஸ்துமஸ் கால குடும்ப கூடுகை விழா ஒய் எம் சி ஏ வளாகத்தில் இன்று 21.12.2025 மாலை நடைபெற்றது.

விழாவினை திருமறையூர் சேகர தலைவர் அருட்திரு ஜான் சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்து துவக்கி வைத்தார்.

ஒய் எம் சி ஏ குழுவினர் சிறப்பு பாடல பாட, ராஜாத்தி உலகராஜ் வேத பாடம் வாசித்தார்.

புஷ்பம் அண்ட் கோ செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார், அப்போது நாசரேத் பகுதியில் மருத்துவ படிப்பு பயில இருக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என கேட்டு கொண்டார். 

மூக்குபீறி ஏக இரட்சகர் சபை தலைவர் குரு.மத்தேயு, தூத்துக்குடி நாசரேத் திருமண்டல உறுப்பினர் திலகர், டி.எம்.பி கிளை மேலாளர் விக்னேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நாசரேத் பேராலய வாலிப பெண்கள் குழுவினர் மற்றும் ஆண்கள் குழுவினர் கிறிஸ்துமஸ் சிறப்பு பாடல்களை பாடினர். கிறிஸ்தவர்கள் பிறருக்கு கொடுப்பதில் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிறிஸ்துமஸ் சிறப்பு செய்தியினை அருட்திரு ஜான் சாமுவேல் வழங்கினார்.

சிகர நிகழ்வாக தைலாபுரம் கல்வாரி சாப்பல் டிரஸ்ட் கருணை இல்லம், நல்லசாமரியன் இல்லம், நாசரேத் திருமண்டலம் சார்பில் இயங்கி வரும் காது கேளாதோர் இல்லம் பள்ளி, மன வளர்ச்சி குன்றியோர் இல்லம் பள்ளி, முதியோர் காப்பகம் ஆகியவற்றுக்கு தேவையான பொருள் உதவிகளை வழங்கினர்.

லேவி அசோக் சுந்தரராஜ் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினர். இதில் நாசரேத் சுற்று வட்டார முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை ஒய்.எம்.சி.ஏ சாமுவேல், உட்பட நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
முடிவில் முன்னாள் ஒய்.எம்.சி.ஏ நிர்வாகி எபனேசர் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad