தூத்துக்குடியில் முத்தையாபுரம் அருகே தனியார் பேருந்து மோதி வட மாநில இளைஞர் பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் முத்தையாபுரம் அருகே தனியார் பேருந்து மோதி வட மாநில இளைஞர் பலி.

தூத்துக்குடியில் முத்தையாபுரம் அருகே தனியார் பேருந்து மோதி வட மாநில இளைஞர் பலி 

தூத்துக்குடி- திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலை முத்தையாபுரம் அருகே
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர்  நோக்கி செல்லும் தனியார் பேருந்து இன்று காலை முத்தையாபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மாப்பிள்ளையூரணி சேர்ந்த  ராமநாதன் மகன் முனியசாமி (19) மற்றும் பின்னால் அமர்ந்த உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிரமான் அலி (24) இவர் இருவரும் எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 

முனியசாமி கம்பெனி தொடர்பாக  திருச்செந்தூரில் காண்ட்ராக்ட் வேலை நடந்து வந்ததாக கூறப்படுகிறது. முனியசாமி மற்றும் அவருடன் வேலை பார்க்கும் நபர் சிரமான் அலி இருவரும் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் சைட்டுக்கு இருசக்கர வாகனத்தில்  சென்ற பொழுது முத்தையாபுரம் காவல் நிலையம் அருகே  பின்னால் வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுனர் (பொன் மாரிமுத்து(33) ) என்பவர் சாலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது கட்டுப்பாட்டை மீறி இருசக்கர வாகனத்தில் மோதி சிரமான் அலி என்பவருக்கு பலத்த காயமும் மற்றும் முனியசாமி என்பவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது.

மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலையம் போலீசார் இருவரை  மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

சிகிச்சை பெற்று வந்த நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் சிரமான் அலி(24) என்பவர் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து முத்தையாபுரம் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு (ஷோபா ஜென்சி) மற்றும் உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad