குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகளுக்கு நல உதவிகள் வழங்குதல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 டிசம்பர், 2025

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகளுக்கு நல உதவிகள் வழங்குதல்!

குடியாத்தத்தில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், விதவைகளுக்கு நல உதவிகள் வழங்குதல்!
குடியாத்தம், டிச. 28 -

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சமூக சேவகர் கே.வி.ராஜேந்திரன் ஏற்பாட்டில் 94-ஆவது. மாதமாக மாற்றுத்திறனாளி கள், திருநங்கைகள், விதவைகளுக்கு நல உதவிகள் என 100 நபர்களுக்கு அரிசி , பருப்பு, போர்வைகள் போன்ற நல உதவி கள் 28.12.2025-அன்று வழங்கப்பட்டன.
நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடை பெற்ற நிகழ்ச்சிக்கு கே.வி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வி. இ.கருணா முன்னி லை வகித்தார். இந்த நிகழ்ச்சியில்சிறப்பு விருந்தினராக குடியாத்தம் வட்டாட்சியர் கே .பழனி கலந்து கொண்டு நல உதவி களையும் பொருட்களையும்வழங்கினார். 
 துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா
36-ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ம.மனோஜ்  முன்னாள் நகர்மன்ற உறுப்பி னர் ஜி.நவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதில், சுமார் நூறு நபர்களு க்கு அரிசி, பருப்பு, சேமியா, ரவை, போர் வைகள் போன்ற  பொருள்கள் வழங்கப் பட்டன.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad