நெல்லையில் மாணவ மாணவியருக்கு மேற்படிப்பிற்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 டிசம்பர், 2025

நெல்லையில் மாணவ மாணவியருக்கு மேற்படிப்பிற்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா.

நெல்லையில் மாணவ மாணவியருக்கு மேற்படிப்பிற்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா.

இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம், MSV Sri Info Tech, Cube Root Foundation மற்றும் சாலைப்புதூர் நாங்குநேரி சுங்கச்சாவடிகள் இணைந்து நடத்தும் பத்தாம் வகுப்பில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்ற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவ மாணவியருக்கு மேற்படிப்பிற்கான ஊக்கத்தொகை வழங்கும் விழா, 13.12.25 அன்று ம தி தா இந்து கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்றது. 

40 மாணவ மாணவிகளுக்கு தலா பத்தாயிரம் வீதம் கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் கியூப் ரூட் பவுண்டேஷன் மூலம் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் பிரசன்ன குமார் டெப்டி கமிஷனர் ஆப் போலீஸ், சிவம் சர்மா டிப்டி ஜெனரல் மேனேஜர் கல்வித்துறையைச் சார்ந்த மாவட்ட கல்வி அதிகாரி, சாய் சுப்புலட்சுமி ஆனந்தராஜ் ரெசிடென்சியல் இன்ஜினியர் அமுத்தி ஸ்ரீனிவாச கிரன்குமார் ப்ராஜெக்ட் ஹெட் 
ஜெபராஜ் மற்றும் சிவக்குமார் மற்றும் முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். 

விழாவில் பள்ளி தலைமையாசிரியர் சோமசுந்தரம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பாக செய்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad