பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் உன்னத் பாரத் அபியான் (UBA) திட்டத்தின் கீழ் பேக்கரி உணவுப்பொருட்கள் தயாரிப்ப தற்கான ஒரு வார பயிற்சி பட்டறை 27/10/2025 அன்று கல்லூரி முதல்வர் அருள் முனைவர்.காட்வின் ரூபஸ் சே.ச அவர்களின் ஆசீர்வாதத்தோடும்
முனைவர்.கே. ரவிச்சந்திரன் (UBA) மண்டல ஒருங்கிணைப்பாளர், காந்திகிராமம் திண்டுக்கல் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
ஒரு வார பயிற்சி ஆனது 09 /12 /2025 முதல் 15 /12 /2025 வரை காலை 10:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெற்றது.
பல்வேறு வகையான பேக்கரி உணவுப் பொருட்களான கேக்,பிஸ்கட், பிரௌனி, ஐஸ் கேக் வகைகளான வெண்ணி, சாக்லேட், பன் மற்றும் பிரட் ஆகியவைகள் தயாரிப்பு பற்றிய செயல்முறைகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
UBA சேவை கிராமத் திலிருந்து குறிப்பாக நாங்குநேரி தாலுகாவைச் சார்ந்த 24 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 24பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பாக பயிற்சிகளை மேற்கொண்டனர்.
கடைசி நாளான 15 /12 /2025 அன்று திருநெல்வேலி மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் திரு. முருகன் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சிக்குப் பிறகு பொருளாதார உதவிக்கான வங்கி கடன் பெறும் வழிமுறைகள் பற்றியும், மாவட்ட தொழில் மையத்தின் உள்ள பெண்களுக்கான தொழிற்சார்ந்த லோன் முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்திலிருந்து தீனதயாளன் அவர்கள் கலந்து கொண்டு, அடுத்த கட்ட இலவச பயிற்சிகள் பற்றியும், அதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துக் கூறினார்.
மகளிர் திட்டத்தின் மேலாளர் திருமதி சுதா அவர்கள் கலந்து கொண்டு, மகளிர் திட்டம் மூலம் பொருட்களை சந்தைப்படுத்துதல் பற்றி விளக்கிக் கூறி னார். இறுதியாக கல்லூரி செயலாளர் அருள் முனைவர் S. லாசர் கலந்து கொண்டு ஆசிகளையும் அறிவுரைகளையும் வழங்கினார்கள். பயிற்சிகளை திறம்பட வழங்கியவர்கள் டெய்சி மற்றும் செல்வராணி ஆகியோர் ஆவர்.
இந்த பயிற்சி பட்டறைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் உன்னத் பாரத் திட்ட த்தின் ஒருங்கிணைப்பாளரும் பேராசிரியருமான முனைவர். ஜான்சன் கிரிட்டோ ஏற்பாடு செய்திருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக