தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாற்று ஓடை அருகே வாகனம் மோதி லாரி டிரைவர் பலி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 8 டிசம்பர், 2025

தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாற்று ஓடை அருகே வாகனம் மோதி லாரி டிரைவர் பலி.

தூத்துக்குடி முத்தையாபுரம் உப்பாற்று ஓடை அருகே வாகனம் மோதி லாரி டிரைவர் பலி.

டிச.8, தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் உப்பாற்று ஓடை அருகே தூத்துக்குடி பெரியசாமி நகரைச் சேர்ந்த கருப்பையா மகன் மாரி செல்வம் (24)இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். 

மாரிசெல்வம் கடந்த ,6/12/2025-ம் தேதி அன்று மாலை 3.15 மணி அளவில் இவருடைய மூத்த சகோதரி (முருகவள்ளி)யின் கணவருடைய இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு முத்தையாபுரம் போயிட்டு வருவதாக கூறி சென்றுள்ளார். 

அப்படி முத்தையாபுரம் சென்று விட்டு வீட்டிற்கு செல்லும் பொழுது தூத்துக்குடி இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் கீழே விழுந்து பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. 

சம்பவத்தை கண்ட அப்பகுதி மக்கள் காயம் பட்ட இளைஞரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வந்த நிலையில் 08/12/2025-ம் தேதி இன்று காலை உயிரிழந்தார்.

இது குறித்து முத்தையாபுரம் காவல் நிலையம் ஆய்வாளர் (பொறுப்பு) சண்முகலட்சுமி உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad