பேரணாம்பட்டு அருகே முன் விரோதம் காரணமாக சபரிமலைக்கு மாலை அணிந்து இருந்த இளைஞருக்கு கத்தி வெட்டு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 டிசம்பர், 2025

பேரணாம்பட்டு அருகே முன் விரோதம் காரணமாக சபரிமலைக்கு மாலை அணிந்து இருந்த இளைஞருக்கு கத்தி வெட்டு!

பேரணாம்பட்டு அருகே முன் விரோதம் காரணமாக சபரிமலைக்கு மாலை அணிந்து இருந்த இளைஞருக்கு கத்தி வெட்டு!
குடியாத்தம் , டிச 10 -

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பல்லாலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33) இவர் திருப்பூர் பகுதி யில் வேன் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் அதே கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி வெற்றிவேல் ( வயது 40) இவரது மனைவி அஸ்வினி இவர் களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் வெற்றிவேலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அஸ்வினி தற்போது தனியாக திருப்பூர் பகுதியில் வசித்து வருகிறார் இதனிடையே தனது மனைவி பிரிந்ததற்கு காரணம் சுரேஷ் தான் என சுரேஷுக்கும் வெற்றிவேலுக் கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதனிடையே சுரேஷ் தற்போது சபரிமலைக்கு மாலை அணிந்து இருந்த நிலையில் பூஜைக்காக தனது சொந்த ஊரான பல்லாலகுப்பத் திற்கு வந்துள்ளார் அதை அறிந்த வெற்றி வேல் சுரேஷிடம் வாக்குவாததில் ஈடுபட்டு கத்தியால் வெட்டி உள்ளார் இதில் படுகாயம் அடைந்த சுரேஷை அங்கு இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது மேலும் இதுகுறித்து சுரேஷ் அளித்த புகாரின் பேரில் தற் போது மேல்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள வெற்றி வேல்லை தேடி வருகின்றனர் மேலும் இது குறித்து மேல்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad