கோவை வடக்கு மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காரமடை நகர திமுக பொறுப்பாளராக தலைமைக் கழகத்தால் புதிதாக நியமனம் செய்யப்பட்ட கே.ஜி. குருபிரசாத் அவர்களுக்கு, காரமடை நகர திமுக சார்பு அணியினர் சார்பில் உற்சாகமான வாழ்த்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு காரமடை நகர திமுக ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் *வி.ஆர். பத்ரி* தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் காரமடை நகர 17வது வார்டு அவைத்தலைவர் முத்துசாமி, துணைச் செயலாளர் திருமதி ஷீலா சசிகுமார், பிரதிநிதி திருமதி பிரேமா சரவணகுமார், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மு. சுபாஷ், பரத், ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர்கள் ஆர். அருள்குமார், தே. குமார், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் நா. பூபதி, திமுக தொண்டரணி துணை அமைப்பாளர்கள் வி.ஆர். ராம்கி, சூரிய பிரகாஷ், மாணவரணி துணை அமைப்பாளர் கவின், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, புதிதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும், காரமடை நகர 17வது வார்டு இளைஞரணி அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், துணை அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோருடன், 17வது வார்டுக்குட்பட்ட சாஸ்திரி நகர், அம்பேத்கர் நகர், கேகே நகர், பட்டிக்காரம்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு, தலைமைக் கழகத்தின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய கே.ஜி. குருபிரசாத் அவர்கள், கட்சியின் நம்பிக்கைக்கு உரிய வகையில் காரமடை நகர வளர்ச்சிக்கும், திமுகவின் இலக்குகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கும் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என உறுதியளித்தார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக