திமுகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில், சென்னை முகாம் அலுவலகத்திலிருந்து “என் வாக்குச் சாவடி – வெற்றி வாக்குச் சாவடி” என்ற தலைப்பில் கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டம் கோவை வடக்கு மாவட்டம், காரமடை காந்திநகர் அருகே உள்ள கலை மஹால் வளாகத்தில் காணொளிக் காட்சி மூலம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
இக்கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ. ரவி, முன்னாள் மாவட்ட செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன், கவுண்டம்பாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மூலனூர் கார்த்தி, மேட்டுப்பாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஜெயக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.பி. சுப்பிரமணியம், டி.ஆர். சண்முகசுந்தரம், ஆர்.எஸ்.புரம் பகுதி செயலாளர் கார்த்திக் செல்வராஜ், காரமடை நகர பொறுப்பாளர் குருபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், காரமடை ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், எஸ்.எம்.டி. கல்யாணசுந்தரம், தாயனூர் பிரதீப், காந்தி, நகர செயலாளர்கள் அறிவரசு, முனுசாமி, அசரப் அலி, பேரூர் கழக செயலாளர்கள் எம்.ஆர். உதயகுமார், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் மற்றும் காரமடை நகர கழக நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு, ஒவ்வொரு வாக்குச் சாவடியையும் வெற்றிவாக்குச் சாவடியாக மாற்றுவதற்கான பணிகள், கழக நிர்வாகிகளின் பொறுப்புகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை அடிப்படை அளவிற்கு கொண்டு செல்ல வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக