திருப்பூர் வடக்கு பொங்குபாளையம் கிராமம் காளம்பாளையம் பகுதியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் காலாவதியான 100 அடி ஆழமுள்ள பாறைகுழியில் சுமார் 50 அடி ஆழத்திற்கு சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் தேங்கி பெரிய குளம் போல் நிற்கிறது இதற்கு அருகில் இருந்த புல எண் 206 இல் சுமார் ஆறு ஏக்கர் அரசு பாறைக்குளியில் சட்ட விரோதமாக திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் கடந்த அக்டோபர் முதல் மே மாதம் வரை குப்பைகளை கொட்டியதன் விளைவாக அருகில் இருந்த புல எண் 207 சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் கெட்டுவிட்டது என்றும் இது மேலும் தொடர்ந்தால் அருகில் உள்ள 40 ஏக்கர் பாறைக்குழியில் தேங்கி இருக்கும் நீர் கெடுவது மட்டுமல்ல நிலத்தடி நீர் பாதித்து சுற்றி பல கிலோமீட்டர் தூரம் வரை நிலத்தடி நீர் மாசடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது இதற்கு முதலிபாளையம் பகுதியே சாட்சி திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தின் சட்டவிரோதமாக பல்வேறு வகையான குப்பைகளை கொட்டி சுமார் 1.20 லட்சம் TDS அளவில் வந்ததன் விளைவாக சுற்றி இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் தண்ணீர் கெட்டு விட்டதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளது இது தொடர்பாக (காளாம்பாளையம்) குப்பை கொட்டிய இடத்தில் இருந்து சுற்றி இருக்கும் அனைத்து பகுதியும் பாதிக்கக்கூடும் குறிப்பாக சுமார் 900 மீட்டர் தூரத்தில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று சிறப்புமிக்க பண்பாடுகளை கட்டி காத்து வரும் திருமுருகன் பூண்டி திருமுருக நாதர் சுவாமி திருக்கோயிலில் சிறப்பு மிக்க புண்ணிய தீர்த்தம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே திருக்கோவில் நிலத்தடி நீரை பாதுகாக்க கோரி சுகாதார சீர்கேட்டை தடுக்க கோரி உடனடியாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 8-12-2025 திங்கள் கிழமை காலை 10 மணி முதல் ஒரு மணி வரை திருமுருகன் பூண்டியில் உள்ள பெரியாயிபாளையம் சாலை பிரியா மெஸ் எதிரில் நடைபெறுகிறது இந்த கூட்டத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க திருக்கோவில்களின் பண்பாடுகள் மீது இயற்கை மீது கடவுளின் மீது பற்றோடு இருக்கும் அனைவரும் பாகுபாடு இன்றி கலந்து கொண்டு நமது வரலாற்று புராதானத்தை புனிதத்தை காக்க பாதுகாக்க ஆதரவு கொடுத்து கலந்து கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு திருக்கோவில்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் இரா சதீஷ்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக