டிச.6- இலங்கையில் டிட்வா புயலால் கடும் பாதிப்புக்குள்ளான இலங்கைக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை துறைமுகத்திலிருந்து நிவாரண பொருட்களை அனுப்பி வைத்ததை தொடர்ந்து, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திலிருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான மூன்று கப்பல்களில் நிவாரண பொருட்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக