புரட்சி பாரதம் கட்சியினரின் சார்பில் பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் வீரவணக்கம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 6 டிசம்பர், 2025

புரட்சி பாரதம் கட்சியினரின் சார்பில் பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் வீரவணக்கம்.

புரட்சி பாரதம் கட்சியினரின் சார்பில் பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் வீரவணக்கம் 

தூத்துக்குடியில் புரட்சியாளர் பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் 69ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலைக்கு புரட்சி பாரதம் கட்சி தேசிய தலைவர் பூவை M. ஜெகன் மூர்த்தி ஆணைப்படி, பொதுச் செயலாளர் ருசேந்திர குமார் மற்றும் மாநில செயலாளர் மாரி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில், மாவட்ட பொருளாளர் தொம்மை குரூஸ், மாவட்ட துணைச் செயலாளர் இந்திரன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சிறு லட்சுமி சிலைக்கு கட்சி நிர்வாகிகள் அனைவரும் மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad