கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு விழாவில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின். டி
கன்னியாகுமரி மாவட்ட ஊர்க்காவல் அமைப்பில் 09 ஆண்கள் மற்றும் 07 பெண்கள் என மொத்தம் 16, கடலோர ஊர் காவல் படைக்கு 15 ஆண்கள் என மொத்தம் 31 ஊர்க்காவல் படை ஆளிநர்கள் தேர்வு செய்யப்பட்டன.
தேர்வு செய்யப்பட்ட 31 ஊர் காவல் படையினருக்கு கடந்த 03.11.2025 ஆம் தேதி முதல் 30.12.2025 தேதி வரை மொத்தம் 45 நாட்கள் மாவட்ட ஆயுதப்படையில் வைத்து பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊர்காவல் படை படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு ஊர்காவல் படையினருக்கு அறிவுரை வழங்கினார். மேலும் சிறப்பாக பயிற்சி செய்த ஊர்க்காவல் படையினருக்கு பண வெகுமதி மற்றும் பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர். ஜெயச்சந்திரன், ஆயுதப்படை ஆய்வாளர்.மகேஸ்வரி, வட்டார தளபதி டாக்டர்.பிளாட்பின், துணை வட்டார தளபதி திருமதி.மைதிலி சுந்தரம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக