அரசு இடத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக மரக்கடைக்கு பயன்படுத்திய வர்த்தக மின்சார இணைப்பு துண்டிப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 31 டிசம்பர், 2025

அரசு இடத்தை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக மரக்கடைக்கு பயன்படுத்திய வர்த்தக மின்சார இணைப்பு துண்டிப்பு



திருப்பூர் மாவட்டம் - திருப்பூர் வடக்கு வட்டம், போயம்பாளையம் பழனிச்சாமி நகரிலுள்ள தொட்டிபாளையம் கிராமம், புல எண் 295A/1 -ல் பு.ஏ 1.04 விஸ்தீரணமுள்ள இடமானது கல்லாங்குத்து - கால்பாதை என வருவாய் துறைக்கு சொந்தமான இடம் என உள்ளதால் மின் இணைப்பினை துண்டிப்பது குறித்து திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் தொடர்ச்சியாக இது தொடர்பாக 99 முறை புகாரளித்திருந்தார். கடந்த 33 மாதங்களாக பல்வேறு எதிர்ப்புகள் அச்சுறுத்தல்கள் உள்ளிட்ட எந்த மிரட்டலுக்கும் அடிபணியாமல் தொடர்ச்சியாக புகார் செய்து கொண்டிருந்தார் 

இந்நிலையி்ல இது குறித்து திருப்பூர் வடக்கு வட்டாச்சியர் திரு.வே.கண்ணாமணி அவர்கள் மின்வாரியத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில்.....

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், போயப்பாளையம் பழனிச்சாமிநகரிலுள்ள தொட்டிபாளையம் கிராமம், புல எண் 295A/1 -ல் பு.ஏ 1.04 விஸ்தீரணமுள்ள இடமானது கல்லாங்குத்து, கால்பாதை வகைபாட்டில் உள்ள வருவாய் துறைக்கு சொந்தமான இடமாக உள்ளதால் மின் இணைப்பினை துண்டிப்பது குறித்து கருத்து கோரி ஆர்.கே.நகர் உதவி மின்பொறியாளர் அவர்களின் மனுவில் காணும் கடிதம் வரப்பெற்றது.

மேற்காண் புலத்தில் மின் இணைப்பு துண்டிப்பது தொடர்பாக வடக்கு வட்டாச்சியர் அலுவலகம் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டது. எனவே மேற்படி கடிதத்தில் காணும் கடிதத்தில் குறிப்பிட்டபடி மின் இணைப்பினை துண்டிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்து மனுதாரர் ஈ.பி.அ.சரவணன்  இணையவழி மனு அளித்துள்ளார்.

 மேற்படி இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் மேற்காண் இடத்தில் உள்ள மின் இணைப்பு எண்.172-010-661 துண்டித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது மின் இணைப்பை துண்டிக்க 5 முறையாக 19-12-2025ம் தேதியில் மீண்டும் தாசில்தார் கடிதம் அளித்திருந்த நிலையில்

22-12-2025 ம் தேதியன்று மேற்படி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மரக்கடை வர்த்தக மின்சார இணைப்பு மின்வாரியத்தினர் துண்டித்தனர்

இபி சரவணன் உரிய தீர்வுகண்ட மாவட்ட ஆட்சியருக்கும், வடக்கு வட்டாச்சியருக்கும், மின்வாரியத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் நன்றி தெரிவித்தார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad