அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109 வது பிறந்தநாள் விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 ஜனவரி, 2026

அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109 வது பிறந்தநாள் விழா !

அதிமுக சார்பில் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 109 வது பிறந்தநாள் விழா !
குடியாத்தம் ,ஜன 17 -

வேலூர் புறநகர் மாவட்டம்  குடியாத்தம் நகர மற்றும் ஒன்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத் தின் சார்பில் கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர் பாரத ரத்னா மன்னாதி மன்னன் பொன் மனச்செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 109வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
 சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி அவர்களின் தலைமையில் படவேட்டு எல்லையம்மன் கோயில் அருகாமையில் இருந்து அலங்கரித்து வைக்கப்பட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திருவுருவ படத்துடன் மாபெரும் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெறது  நிகழ்ச்சியில் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் ஆவின் பெருந்தலைவர்  த.வேலழகன்அவர்கள் கலந்து கொண்டு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக துணை செயலாளர்கள் கஸ்பா ஆர் மூர்த்தி அமுதா சிவப்பிரகாசம் ஒன்றிய கழக செயலாளர்கள் டி சிவா எஸ் எல் எஸ் வனராஜ்  டி பிரபாகரன் வழக்கறிஞர் கே எம் பூபதி ‌.பூங்கொடி மூர்த்தி எம் பாஸ்கர் ஆர்கே அன்பு அன்வர் பாஷா உயர்நீதி மன்ற வழக்கறிஞர்.கோவிந்தசாமி ஜி பரிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
படவேட்டு எல்லையம்மன் கோயில் அருகாமையில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கோலாட்டம் புலி ஆட்டம் தாரை தப்பட்டை கேரள சண்ட மேளம் முழங்க காமராஜர் பாலம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் நிறைவு பெற்றது. நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி அவர்கள் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்ஜிஆர் புரட்சித் தலைவி அம்மா பேரறிஞர் அண்ணா ஆகியோரின் திருவருவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ரவிச்சந்திரன் அமுதா கருணா  சுந்தரேசன் சலீம் அட்சயா வினோத்குமார் தேவராஜ். முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ் டி மோகன் ராஜ் கேசவன் சேவல் நித்தியானந்தம் முத்து சுப்பிரமணி அன்பழகன் அகிலா ண்டேஸ்வரி பிரேம்குமார் அருண் முரளி இன்பரசன் வாசுகி பாண்டியன்  கே.வி ராஜேந்திரன்  மற்றும்  மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad