தூத்துக்குடி மாவட்டத்தில் 117 தலைமைக் காவலர்கள் திடீர் மாற்றம், எஸ்பி உத்தரவு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 ஜனவரி, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் 117 தலைமைக் காவலர்கள் திடீர் மாற்றம், எஸ்பி உத்தரவு.

தூத்துக்குடி மாவட்டத்தில் 117 தலைமைக் காவலர்கள் திடீர் மாற்றம், எஸ்பி உத்தரவு

ஜன.31- தூத்துக்குடி மாவட்டத்தில் 117 
தலைமைக் காவலர்கள் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 

ஆழ்வார்திருநகரியில் தலைமைக் காவலராக பணியாற்றி வரும் பூர்ணராஜ், ஸ்பெஷல் பிராஞ்சுக்கும், ஆறுமுகநேரியில் தலைமைக் காவலராக பணியாற்றும் லட்சுமிநாதன், தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. கன்ட்ரோல் ரூமிற்கும், சி.சி.பி.யில் தலைமைக் காவலராக பணியாற்றும் வேல்ராஜா, தூத்துக்குடி தென்பாகத்திற்கும், டாக் ஸ்குவாட்டில் தலைமை காவலராக பணியாற்றும் பிலிப் அருள்தாஸ், கன்ட்ரோல் ரூமிற்கும் மாற்றப்பட்டு உள்ளனர். 

இதுபோல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 117 தலைமைக் காவலர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad